பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா மாறுதல் செய்வதில் இழுபறி: அலைக்கழிப்பு தவிர்க்கப்படுமா?

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்படும் பத்திரத்தின்படி வருவாய்துறையில் பட்டா மாறுதல் செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.சார்பதிவாளர் அலுவலகங்களில், 'ஆன்லைன்' வாயிலாக பத்திர பதிவு செய்யப்படுகிறது. அப்போது, பட்டா மாறுதலுக்கான ஒரு சர்வே எண்ணுக்கு, 400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சொத்து தொடர்பான பத்திரம், வில்லங்க சான்று

கிணத்துக்கடவு:சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்படும் பத்திரத்தின்படி வருவாய்துறையில் பட்டா மாறுதல் செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.சார்பதிவாளர் அலுவலகங்களில், 'ஆன்லைன்' வாயிலாக பத்திர பதிவு செய்யப்படுகிறது. அப்போது, பட்டா மாறுதலுக்கான ஒரு சர்வே எண்ணுக்கு, 400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சொத்து தொடர்பான பத்திரம், வில்லங்க சான்று போன்றவைகள் வருவாய்துறைக்கு 'ஆன்லைன்' வாயிலாக சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.இதற்கான குறுஞ்செய்தி, பத்திரப்பதிவு செய்தவரின் மொபைல்போன் எண்ணுக்கு அனுப்பப்படுகிறது. அதன்பின், இ-சேவை மையத்தில் புதிதாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை.ஆனால், சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் பத்திரம் தொடர்பான சொத்துக்கு, வருவாய்துறையில் பட்டா மாறுதல் செய்வதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதற்காக, வருவாய்துறை அலுவலகத்திற்கு சென்று, மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.இதனை தவிர்க்க, பதிவுத்துறை இணையதளத்தின் வழியாக வருவாய்துறைக்கு அனுப்பப்படும் பத்திரத்தின் அடிப்படையில், 'ஆன்லைன்' முறையில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் சிட்டாவிலும் பெயர் மாற்றம் செய்ய வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X