பந்தல் சாகுபடிக்கு பல லட்சம் ரூபாய் செலவு: மானியத்தை அதிகரித்தால் நிறைவேறும் கனவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் சாகுபடிக்கு பல லட்சம் ரூபாய் செலவு: மானியத்தை அதிகரித்தால் நிறைவேறும் கனவு

Added : பிப் 23, 2021
Share
உடுமலை:பந்தல் காய்கறி சாகுபடிக்கான, மானிய நிதியை, தோட்டக்கலைத்துறை வாயிலாக கூடுதலாக ஒதுக்கி, அரசு உதவ வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க, அரசு மானியம் அறிவித்தாலும்,
 பந்தல் சாகுபடிக்கு பல லட்சம் ரூபாய் செலவு: மானியத்தை அதிகரித்தால் நிறைவேறும் கனவு

உடுமலை:பந்தல் காய்கறி சாகுபடிக்கான, மானிய நிதியை, தோட்டக்கலைத்துறை வாயிலாக கூடுதலாக ஒதுக்கி, அரசு உதவ வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க, அரசு மானியம் அறிவித்தாலும், பற்றாக்குறையால், சிறு, குறு விவசாயிகள் வெகுவாக பாதிக்கின்றனர்.தற்போது, விளைநிலத்தில், பந்தல் அமைத்து, பீர்க்கன், புடலை, பாகற்காய் உட்பட சாகுபடிகளை மேற்கொள்கின்றனர். கொடி வகைக்காக அமைக்கப்படும், பந்தலால், தரமான காய்கறிகளை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்ய முடியும்.ஆனால், பந்தல் அமைக்க, அதிக செலவு பிடிப்பதால், மானியத்தொகையை எதிர்பார்த்துள்ளனர். உடுமலை, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையில், பந்தல் சாகுபடி மானியம் குறைந்தளவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மானியத்துக்காக பல ஆண்டுகள் காத்திருந்தாலும், பின்னேற்பு என்ற முறையில், நிதி ஒதுக்கப்படுவது சிக்கலை அதிகரிக்கிறது. விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில், கல்துாண் வைத்து, பந்தல் அமைக்க, 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. ஏக்கருக்கு, 120 - 140 கற்கள் நட்டு, அதில், கம்பியை பொருத்தி, பின்னர் சொட்டு நீர் பாசனமும் அமைக்க வேண்டியுள்ளது.இத்தகைய பந்தல் முறையால், 25 ஆண்டுகள் வரை, தொடர்ச்சியாக பந்தல் காய்கறிகளை சாகுபடி செய்ய முடியும். ஆனால், அதிக செலவினத்தால், சிறு, குறு விவசாயிகள், பந்தல் முறையை பின்பற்ற முடியாத நிலையில் உள்ளனர். தமிழக அரசு, இச்சாகுபடிக்கான மானியத்தை, கூடுதல் நபர்கள் பயன்பெறும் வகையில், அதிகரித்து, வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X