அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை பள்ளி வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் அமைப்பதை கண்டித்து அனைத்து கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அவலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்ட அத்துமீறி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.இதனைக் கண்டித்தும், பள்ளி வளாகத்தில் கல்வி சம்மந்தப்பட்ட கட்டடங்கள் மட்டும் கட்ட வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் நேற்று அவலுார்பேட்டை கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்ரமணியன், வட்டார காங்., தலைவர் ராஜவேலாயுதம், மா.கம்யூ., வட்ட செயலாளர் முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க., நிர்வாகிகள், பிரபாகரன், ராமசரவணன், அர்ஷத், செல்வம், கணபதி, கோபாலகிருஷ்ணன், மா.கம்யூ., நகர செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE