பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், 3,876 பயனாளிகளுக்கு, தலா நான்கு விலையில்லா ஆடுகளும், 400 பேருக்கு கறவை மாடுகளும் வழங்கும் பணி நிறைவடைந்தது.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், 14 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கிராமங்களைச் சேர்ந்த, 4,276 ஏழைகள் மற்றும் விதவை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களில், 3,876 பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நான்கு ஆடுகள் என, 15,504 ஆடுகளும், 400 பேருக்கு கறவை மாடுகளும் கடந்த இரண்டு மாதங்களில் வழங்கப்பட்டன.இதுதவிர, கொட்டகை அமைக்கவும், தீவனம் வாங்கவும், 2,000 ரூபாய் மற்றும் பயண செலவுக்கு, 150 ரூபாயும் வழங்கப்பட்டது. இப்பணிகள், பிப்.,15ம் தேதிக்கு முன்பே நிறைவடைந்து விட்டதாக, கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE