'டூல்கிட்' வழக்கு: திஷா ரவிக்கு 'ஜாமின்'

Added : பிப் 23, 2021
Share
Advertisement
புதுடில்லி:'டூல்கிட்' வழக்கில், பருவநிலை செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு, டில்லி நீதிமன்றம், , 'ஜாமின்' வழங்கியது.ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்து, சமூகவலைதளங்களில், எந்தெந்த தினங்களில், என்னென்ன விமர்சனங்களை பகிர வேண்டும் என்ற விபரங்களை ஒருங்கிணைக்கும், 'ஆன்லைன்' ஆவணம், 'டூல்கிட்' எனப்படுகிறது.கடந்த மாதம், குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாயிகள் நடத்திய
 'டூல்கிட்' வழக்கு: திஷா ரவிக்கு 'ஜாமின்'

புதுடில்லி:'டூல்கிட்' வழக்கில், பருவநிலை செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு, டில்லி நீதிமன்றம், , 'ஜாமின்' வழங்கியது.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்து, சமூகவலைதளங்களில், எந்தெந்த தினங்களில், என்னென்ன விமர்சனங்களை பகிர வேண்டும் என்ற விபரங்களை ஒருங்கிணைக்கும், 'ஆன்லைன்' ஆவணம், 'டூல்கிட்' எனப்படுகிறது.

கடந்த மாதம், குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் குறித்து, 'டூல்கிட்' தயாரித்து, அதை பல்வேறு தரப்பினருக்கும் பகிர்ந்ததாக, கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த, பருவநிலை செயற்பாட்டாளர் திஷா ரவி, 22, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.இரண்டு நாள் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, ஆறு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், டில்லி நீதிமன்றத்தில், திஷா ரவி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'காலிஸ்தான் அமைப்புடன் திஷா ரவிக்கு எவ்வித தொடர்பும் இல்லை' என, வாதிட்டார். எனவே, திஷா ரவிக்கு ஜாமின் அளிக்கும்படி கோரினார். இதற்கு போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மேந்திர ரானா, திஷா ரவிக்கு எதிரான ஆதாரங்கள் மேலோட்டமாக இருப்பதாகவும், அவருக்கு குற்றப் பின்னணி எதுவும் இல்லாத காரணத்தினால், அவருக்கு ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, 'டூல்கிட்' பகிர்ந்த வழக்கில், கைது, 'வாரண்ட்' பிறப்பிக்கப்பட்ட இன்ஜினியர் சாந்தனு முலுக், மும்பை உயர் நீதிமன்றத்தில், 10 நாள் தற்காலிக ஜாமின் பெற்றுள்ளார். இந்நிலையில், முன்ஜாமின் கோரி, அவர் டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வரும் என, தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X