அவலுார்பேட்டை : கப்ளாம்பாடியில் சாலையோரத்தில் உள்ள தரை கிணற்றுக்கு தடுப்புச் சுவர் அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்மலையனுார் அடுத்த கப்ளாம்பாடி கிராமத்தில் வண்ணார தெரவில், பாசன கிணறு ஒன்று துார்ந்து போய் பயனற்றதாக உள்ளது. இதில் பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.தற்போது கிணற்றை சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதனால் தெரு ஓரத்தில் செல்லும் சிறுவர்கள், பைக்ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.இப்பகுதியில் 2 மாதங்களுக்கு முன்னர் நிவர் புயல் மழையினால் சேதமடைந்த வாழை தோப்பை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் அண்ணாதுரை, இந்த கிணற்றை பார்த்து விவரம் கேட்டு, தடுப்பு சுவர் அமைக்கவும், குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவும் ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் இது வரையில் தடுப்பு சுவர் கட்டப்படவில்லை.விபரீதம் நடப்பதற்கு முன் சாலையோர கிணற்றுக்கு தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE