சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவிழா நடத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
ஆனைமலை:கோட்டூரில், மாகாளியம்மன் கோவில் திருவிழாவுக்கு, 23ம் தேதி நோன்பு சாட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நோன்பு சாட்டுவதற்கு செயல் அலுவலர் முறையாக அனுமதி தராததால், மக்கள், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.கோட்டூர் பஸ் ஸ்டாப்பில், கோட்டூர் - ஆழியாறு ரோட்டில் நேற்று முன்தினம் இரவு, மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் போலீசார்,
 திருவிழா நடத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

ஆனைமலை:கோட்டூரில், மாகாளியம்மன் கோவில் திருவிழாவுக்கு, 23ம் தேதி நோன்பு சாட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நோன்பு சாட்டுவதற்கு செயல் அலுவலர் முறையாக அனுமதி தராததால், மக்கள், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.கோட்டூர் பஸ் ஸ்டாப்பில், கோட்டூர் - ஆழியாறு ரோட்டில் நேற்று முன்தினம் இரவு, மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் போலீசார், மக்களிடம் சமரச பேச்சு நடத்தி, கோவில் செயல் அலுவலர் சரவணபவனை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.அப்போது, செயல் அலுவலர், 'ஊர் முழுவதிலும் தண்டோரா அடித்து, இரவு நோன்பு சாட்டி திருவிழாவை துவங்கலாம்,' என மக்களிடம் உறுதியளித்தார். இதையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால், அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X