வெயிலில் காயும் பயணிகள்: பஸ் ஸ்டாப்பில் மக்கள் சிரமம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
உடுமலை:சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த எரிசனம்பட்டி சந்திப்பு ரோட்டில், பயணிகள் நிழற்கூரை இல்லாததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.உடுமலை அடுத்த எரிசனம்பட்டி சந்திப்பு, ஆனைமலை மற்றும் பழநி ஆகிய இரு முக்கிய ரோடுகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. இவ்வழித்தடத்தில், அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தவிர, சுற்றுலாப் பயணிகளும், இவ்வழித்தடத்தை அதிகம்
 வெயிலில் காயும் பயணிகள்: பஸ் ஸ்டாப்பில் மக்கள் சிரமம்

உடுமலை:சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த எரிசனம்பட்டி சந்திப்பு ரோட்டில், பயணிகள் நிழற்கூரை இல்லாததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.உடுமலை அடுத்த எரிசனம்பட்டி சந்திப்பு, ஆனைமலை மற்றும் பழநி ஆகிய இரு முக்கிய ரோடுகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. இவ்வழித்தடத்தில், அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தவிர, சுற்றுலாப் பயணிகளும், இவ்வழித்தடத்தை அதிகம் பயன்படுத்துவதால், இங்கு, எப்போதும் வாகன நெரிசல் காணப்படுகிறது.சுற்றுப்பகுதி கிராம மக்களும், இவ்வழித்தடத்தை பயன்படுத்தியே உடுமலை, பழநி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, சென்று திரும்புகின்றனர். சமீபத்தில், அவ்வழித்தடத்தில், புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டிருந்தாலும், முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்கூரையும் இடிக்கப்பட்டது. இதனால், பகல் நேரங்களில், பஸ்க்காக காத்திருக்கும் குழந்தைகள், பெரியவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.மேலும், எரிசனம்பட்டி சந்திப்பில், வாகன பார்க்கிங், ரோட்டோர கடைகள் போன்ற நெருக்கடியால், நடு ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. மக்களும், பாதுகாப்பின்றி, பஸ்சில் ஏறி, இறங்கிச் செல்கின்றனர்.சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில், ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும். தவிர, பயணிகள் நிழற்கூரை அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஊராட்சித்தலைவர் பாரதியிடம் கேட்டபோது,''பயணிகள் நிழற்கூரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X