பொது செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோத செயல்களை தடுத்து மக்களின் அச்சம் தவிர்க்கணும்!உறக்கத்தில் உடுமலை கோட்ட போலீசார்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், சட்ட விரோத செயல்கள் அதிகளவு நடந்து வரும் நிலையில், பிச்சைக்காரர்களை கல்லால் தாக்கி பணம் பறித்தல், போலீஸ் என கூறி, வாகனங்களை பறித்தல் உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை சப் - டிவிஷனுக்குபட்ட பகுதிகளில், சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்தல், சூதாட்ட கிளப்கள்,

உடுமலை:உடுமலை பகுதிகளில், சட்ட விரோத செயல்கள் அதிகளவு நடந்து வரும் நிலையில், பிச்சைக்காரர்களை கல்லால் தாக்கி பணம் பறித்தல், போலீஸ் என கூறி, வாகனங்களை பறித்தல் உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை சப் - டிவிஷனுக்குபட்ட பகுதிகளில், சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்தல், சூதாட்ட கிளப்கள், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, 'ஆன்லைன்' லாட்டரி கும்பல் ஆதிக்கம் என பல்வேறு சட்ட விரோத செயல்கள் அதிகளவு நடந்து வருகின்றன.உடுமலையில், உரக்கடை அதிபரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை, ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளை என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, கல்பனா ரோடு, 'அம்மா' உணவகம் முன் படுத்திருந்த, பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும், தங்கவேல், 67, கிருஷ்ணமூர்த்தி, 34, ஆகியோரை, இருவர் கல்லால் தாக்கி, பணத்தை பிடுங்கிச்சென்றனர். இதில், தலை, உடலில் பல இடங்களில் ரத்தக்காயங்களுடன் மயங்கி விழுந்த இருவரையும், பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மிரட்டி வாகனம் பறிப்புநேற்றுமுன்தினம் இரவு, 1:30 மணிக்கு, ஐஸ்வர்யா நகரைச்சேர்ந்த, விஜயகுமார், 65, தனது மனைவியுடன், பழநி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது, அவ்வழியே வந்த, 30 வயது மதிக்கத்தக்க நபர், தான் போலீஸ் என கூறி, 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரையும், மொபைல் போனையும் பறித்துக்கொண்டு, காலையில் வந்து போலீஸ் ஸ்டேஷனில் வாங்கிக்கொள்ளுமாறு கூறி விட்டு சென்றுள்ளார்.பஸ் ஸ்டாண்டில், வழிப்பறி, செயின் பறிப்பு, பிக்பாக்கெட், மொபைல் போன் திருட்டு என குற்றச்சம்பவங்கள் வழக்கமாக நடந்து வருகிறது. ரோடுகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு, கார்களில் நுாதன திருட்டு என அதிகளவு நடந்து வருகிறது.சமீபத்தில், மின் நகர், செல்வபுரம், காந்திநகர், ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வீட்டுக்கதவை உடைத்து திருட்டுக்களும் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தாலும், போலீசார் வழக்குப்பதிவு செய்வதில்லை.எனவே, உடுமலையில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிப்பதிலும், மோசடி பேர்வழிகள், ரவுடிகளை கண்காணிப்பதிலும் அலட்சியமாக உள்ளனர்.குற்றச்செயல்களை தடுப்பதற்கு ரோந்து செல்வது, புகார்கள் பதிவு செய்வதும் இல்லை. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மாவட்டத்தில் எல்லையில் உள்ள, உடுமலை சப்-டிவிஷன் பகுதிகளில், திருப்பூர் எஸ்.பி., கூடுதல் கவனம் செலுத்தி, சட்ட விரோத செயல்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களின் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை பிடிக்கவும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X