தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தாக்கல் செய்யப்படும்இடைக்கால பட்ஜெட்டில், ஏராளமான கவர்ச்சி அறிவிப்புகள் இடம்பெறும் என,எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிதாக எந்த திட்டங்களும் அறிவிக்கவில்லை.நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து,வழக்கம்போல் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து,பொள்ளாச்சி, உடுமலை மக்கள் தெரிவித்த கருத்து வருமாறு: விவசாய பட்ஜெட்முருகானந்தம், விவசாயி, கரட்டுப்பாளையம்: பயிர் கடன் தள்ளுபடிக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 5,000 கோடி ரூபாய்; புதிதாக பயிர் கடன் வழங்க, 1,738.81 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மொத்தமாக, வேளாண் துறைக்கு, 11,982 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார துறைக்கு அடுத்தபடியாக, அதிகபட்ச நிதி அளித்து, விவசாயத்துக்கு முக்கியத்துவம் தருவது வரவேற்கத்தக்கது. இதனால், நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மேம்படும். தேர்தல் பட்ஜெட்கார்த்திக், வால்பாறை: இடைக்கால பட்ஜெட் தேர்தலை குறிவைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தலைவர், விபத்தில் மரணம் அடைந்தால், ரூ. 4 லட்சம், இயற்கை மரணம் அடைந்தால், ரூ. 2 லட்சம் என்ற அறிவிப்பு வரவேற்க்கதக்கது. சுகாதாரத்துறைக்கு அதிக அளவில் நிதிஒதுக்கீடு செய்துள்ளது அவசியமான ஒன்றாகும். மாணவர்களின் நலன் கருதி, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் துவங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. தேயிலை தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. மாவட்டம் இல்லையே!பத்மநாபன், தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர்: வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு இந்த ஆண்டே, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6 - 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவித்து, வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எதிர்பார்ப்புஆதித்யா ஜெயராமச்சந்திரன், தென்னை நார் உற்பத்தியாளர் சங்க துணை தலைவர்: கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரவேற்கதக்கது. தமிழகத்தின் கடன் உயர்ந்துள்ளது வேதனை அளிக்கிறது. பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அறிவிப்பு இல்லை. இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், மாவட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.விவசாயத்துக்கு நிதிசசிக்குமார், குருவேகவுண்டன்பாளையம்: விவசாயத்துக்கு கடந்த ஆண்டைவிட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்டோ ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, கோவையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். கிராமப்புற சாலைகள் திட்டத்திற்கும், உயர்கல்வி திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.அறிவு சார்ந்த முதலீடுபாலமுருகன், தமிழாசிரியர், பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி: அரசு உயர் கல்விக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி இளைஞர்களுக்கான அறிவு சார்ந்த முதலீடு. கிராமப்புற பள்ளிகளில், கணிப்பொறி அறிவியலில் மாணவர்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். இந்நிலையில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தனியாக, கணிப்பொறி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால், கணினி குறித்த தெளிவான, ஆழமான அறிவுள்ள மாணவர்கள் உருவாகவும், புதிய கண்டுபிடிப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.அதிக நிதி ஒதுக்கீடுஆர்.கோவிந்தராஜ், விவசாயி, எரிசனம்பட்டி: பட்ஜெட்டில், பல துறைகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழக அரசின் கடன், 5.7 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். தமிழகத்தில், கூடுதலாக 12 ஆயிரம் பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவைகள் முறையாக பராமரிக்க ஐ.ஏ.எஸ்., தலைமையில் அத்துறை இயங்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சி என்.ஞானக்கண், கோவில் பூசாரி, சடையபாளையம்: வேளாண் துறைக்கு, 11,982 கோடி ரூபாய்; பயிர்க்கடன் திட்டத்திற்கு, 1738.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான வாழ்வு, ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் போன்றவை மக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன. பட்ஜெட் திட்டங்கள் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும். தொலைநோக்கு பார்வைசி.குப்புசாமி, டிரைவர், உடுமலை: தொலைநோக்கு பார்வையில், அரசு துறைகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, சரக்கு வாகனங்கள் வாடகை உயர்வு போன்ற காரணங்கள், தொழில் மேம்பாட்டை தடுக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் 2 லட்சம் காப்பீடு; விபத்தில் மரணம் அடைந்தால், 4 லட்சம் காப்பீடு போன்றவை பெரிதும் உதவிகரமாக இருக்கும்.வரவேற்கத்தக்கதுஎம்.பாலசுப்ரமணியம், தொழிலாளி, சாலரப்பட்டி: இடைக்கால பட்ஜெட்டில் வீடு, இடம் இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி, வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது தவிர, சிறு, குறு தொழில் மேம்பாடு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக பஸ் வாங்கவும், மின்சார பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல சிறப்பம்சங்களும் மக்களுக்கான நலத்திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. சுகாதாரத்துறைக்கும் கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயனளிக்கும்எம்.கண்ணன், விவசாயி, சாலரப்பட்டி: பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கடன் தள்ளுபடிக்கான தொகையை ஒதுக்கியிருப்பதால், விவசாயிகள் கடன் பெற்று சாகுபடி மேற்கொள்ள வழிவகுக்கும். கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருப்பது, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வை ஏற்படுத்தும். சுகாதாரம், ஊரக வளர்ச்சி என, பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொலைநோக்கு பார்வையில் இந்த இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE