திண்டிவனம் : ஓங்கூர் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறுவிவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மணி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: திண்டிவனம் அருகே கடவாம்பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்துார், மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல திண்டிவனம் வந்து செல்ல வேண்டி உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றில் கடவாம்பாக்கம் பகுதியில் மேம்பாலம் கட்டிக் கொடுத்தால், செங்கல்பட்டு மாவட்டம், சிறுவிலம்பாக்கம், நெற்குணம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு சுலபமாக செல்ல முடியும்.
மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு செய்துள்ளார்.விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில் ஓங்கூர் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE