வாஷிங்டன்:இந்தியாவுடனான சுகாதாரத் துறை தொடர்பான உறவை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்நோக்குவதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில், நேற்று முன் தின நிலவரப்படி, 2.81 கோடிக்கும் அதிகமானோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐந்து லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில், உலக அளவில், அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையிலான சுகாதார உறவை மேம்படுத்த, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்நோக்கிஉள்ளது.
நோயைக் கண்டறிவது, சிகிச்சை முறைகள், கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதற்கும், அத்தியாவசிய மருந்துகளை தயாரிப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கும், அவற்றை உலகளவில் கிடைக்ககூடியதாக மாற்றுவதற்கும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம்.
இந்திய மருந்து தயாரிப்பு துறை எப்போதும் வலுவாக உள்ளது. உயிர் காக்கும் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்கி வருகிறது.கொரோனா தொற்று பரவல் துவங்கியது முதலே, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன், அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்வது, சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, சர்வதேச அளவிலான தொடர்பு சங்கிலியை உருவாக்குவது உள்ளிட்டவைகளில், இந்தியாவுடன் கூட்டாக செயல்பட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE