கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கருணை இல்லத்திற்கு, மாவட்ட காதுகேளாதோர் நலச் சங்கம் சார்பில் இலவச உடை, தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கருணை இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு காதுகேளாதோர் நலச் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர் ஏசுபாலன், பொருளாளர் அரவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஸ்பீட் அறக்கட்டளை நிர்வாகி சிவசூரியன் வரவேற்றார். கருணை இல்லத்தில் ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய 40 மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய உடைகள், உணவு, போர்வை, மளிகை பொருட்கள், பேன் உட்பட பல்வேறு தளவாட பொருட்கள், காதுகேளாதோர் நல சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE