மடத்துக்குளம்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, மடத்துக்குளம் பகுதியில் நெல் கொள்முதல் மையம் செயல்படத்தொடங்கியுள்ளது.மடத்துக்குளம் தாலுகா புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதியில், அமராவதி அணையின் நீர் இருப்பை பயன்படுத்தி, குறுவை, சம்பா ஆகிய இரண்டு பருவங்களில் இங்கு நெல் நடவு செய்யப்படுகிறது.முக்கிய பயிராக உள்ள நெல்லுக்கு உரிய விலை கிடைக்க, ஆண்டுதோறும், மடத்துக் குளம், கணியூர், கொமரலிங்கம் ஆகிய இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடங்குவது வழக்கம். நடப்பாண்டு அறுவடை தொடங்கிய பின்பும் கூட, இம்மையம் தொடங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், அரசு நேரடி நெல் கொள் முதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ, சன்ன ரக நெல்லுக்கு, 19 ரூபாய் 60 காசும், குண்டு நெல்லுக்கு, 19 ரூபாயும் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை, 20 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE