அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசு ஊழியர்களின் கோரிக்கை: தி.மு.க., ஆட்சியில் நிறைவேறும்'

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை : 'அரசு ஊழியர்களின் கோரிக்கை, விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இரட்டை வேடம் போடும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒருபுறம் நாடகமாடுகிறது. மற்றொரு புறம் உரிமைக்காகப் போராடுவோரை கைது
 'அரசு ஊழியர்கள், கோரிக்கை தி.மு.க., ஆட்சி, நிறைவேறும்'

சென்னை : 'அரசு ஊழியர்களின் கோரிக்கை, விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

இரட்டை வேடம் போடும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒருபுறம் நாடகமாடுகிறது. மற்றொரு புறம் உரிமைக்காகப் போராடுவோரை கைது செய்து, கொடுமைப்படுத்தும் படலம் அரங்கேறுகிறது.


காத்திருப்பு போராட்டம்

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்துக்குரியது. உரிமை போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமெடுக்காத, அ.தி.மு.க., அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்தி வையுங்கள்.
உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
24-பிப்-202122:11:57 IST Report Abuse
adalarasan அதெல்லாம் சரி, அப்படியே,நிதி எங்கிருந்து வரும் ,என்பதையும், தெரிவிக்கவும்பிறகு, மத்திய அரசு கொடுக்கவில்லை, அதனால், தாமதமாகிறது என்று ஏமாற்றக்கூடாது மக்கள் பணத்தை வரி இறைத்து, அதிகாரத்திற்கு வரலாம்ஆனால், நிர்வாகம் சீரழிந்து விடும்மக்கள் ஏமாற்றுப்படுகிறார்கள் 1967 லிருந்து
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-பிப்-202121:05:00 IST Report Abuse
RajanRajan சம்பளமும் கிம்பளமும் வாங்க வழிவகை பண்ணி ஓட்டு வங்கியை கட்டி ஆண்டு ஆட்டைய போட்ட திராவிட கொள்ளை கூட்டம்..உசார் உசார் மக்களே...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-பிப்-202120:52:10 IST Report Abuse
sankaseshan ஆட்சிக்கு வந்தாத்தானே ? கோ ரணகாலத்துல வேலையில்லாம சம்பளம் அதுக்குமேல அடாவடி கிம்பளம் நாடு உருப்பட்ட மாதிரிதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X