உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும், 12 தாசில்தார்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இதில், உடுமலை தாசில்தாராக இருந்த ஜெயசிங் சிவக்குமார் மாற்றப்பட்டு, திருப்பூர் வடக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தாசில்தாராக இருந்த, ராமலிங்கம், உடுமலை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.உடுமலை குடிமைப்பொருள் தனி தாசில்தாராக இருந்த விவேகானந்தன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மடத்துக்குளம், குடிமைப்பொருள் தனி தாசில்தாராக இருந்த தயானந்தன் மாற்றப்பட்டு, உடுமலை குடிமைப்பொருள் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மடத்துக்குளம் குடிமைப்பொருள் தனி தாசில்தாராக கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE