பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக பயிற்சி பள்ளி வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள பயிற்சி தளம், காணொளி வாயிலாக திறக்கப்பட்டது.பொள்ளாச்சியில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி, கடந்த, 1978 முதல் செயல்படுகிறது. இந்த பள்ளியில், ஓட்டுனர் பயிற்சியின் போது, ரோடுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் படி, ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.அதன்படி, பொள்ளாச்சி போக்குவரத்துக் கழக பயிற்சிப் பள்ளியில், 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓட்டுனர் பயிற்சி தளம் மற்றும் பயிற்சி பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை, முதல்வர் பழனிசாமி, காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.கனரக வாகன பயிற்சி தளத்தில், சோதனை ஓட்டத்தை, கோவை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆப்ரஹாம் துவங்கி வைத்தார். தலைமை கணக்கு அலுவலர் சங்கர், பொது மேலாளர் (தொழில் நுட்பம்) குமார், துணை மேலாளர் (தொழில் நுட்பம்) ஜோதி மணிகண்டன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், துணை மேலாளர் (கட்டடம்) பொன்னுசாமி, கோட்ட மேலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE