உடுமலை:பகுதி நேரமாக செயல்பட்ட நுாலகங்களை முழு நேரமும் திறக்க, திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு, கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, பொது நுாலகத்துறை, மாவட்ட நுாலக ஆணைக்குழுவின், நுாலகங்களை, பகுதி நேரமாக மட்டும், செயல்படுத்த, உத்தரவிட்டது.அதன்படி, மாவட்ட நுாலகங்கள், காலை, 8:00 மணி முதல் பகல், 2.00 மணி வரையும், கிளை நுாலகங்கள், காலை, 9:00 மணி முதல் பகல், 12:30 மணி வரை செயல்பட்டு வந்தன. பகுதி நேர நுாலகங்கள் மூடப்பட்டன.ஊரடங்கின், பல்வேறு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள, அனைத்து நுாலகங்களையும், முழு நேரமும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பகுதி நேர நுாலகங்களும், நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவில், கிளை நுாலகங்களில், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவு தவிர்த்து, அனைத்து, பிரிவுகளும், முழுமையாக செயல்படுத்த வேண்டும். நுாலகத்தில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது.நுாலகத்துக்கு வரும் வாசகர்கள், பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின்பே, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE