கொழும்பு:சீனா மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளை ஒதுக்கிவிட்டு, இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், கொரோனா பரவலை தடுக்க உதவும் வகையில், நம் நாட்டின் சார்பில் கடந்த மாதம், ஐந்து லட்சம், 'டோஸ்' ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி, இலவசமாக வழங்கப்பட்டது, அதை தொடர்ந்து, அந்நாட்டின் தரப்பில் முதற்கட்டமாக, ஒரு கோடி டோஸ் தடுப்பூசி, நம்மிடம் இருந்து வணிக ரீதியாக கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, நம் நாட்டில் இருந்து ஒரு கோடியே, 35 லட்சம் டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உள்ளதாக, அந்நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் கூறினார்.
இதுகுறித்து, இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரமேஷ் பதிராணா கூறியதாவது:சீனா மற்றும் ரஷ்ய தடுப்பூசிகள், இதுவரை தயாராகவில்லை. சீன தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட பரிசோதனை குறித்த ஆவணங்களும், இதுவரை எங்களிடம் வழங்கப்படவில்லை.எனவே, இலங்கையில் இரண்டாம் கட்டமாக, ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE