உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார்.உளுந்துார்பேட்டை பேரூராட்சி 8.60 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.
18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் உள்ள வீடுகளின் கழிவு நீரை கொண்டு செல்லும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக 38.66 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 50.28 கிலோமீட்டர் துாரத்திற்கு பாதாள சாக்கடை பைப் லைன் அமைக்கும் பணி நடந்துவருகிறது.வீட்டில் இருந்து கழிவு நீர் வெளியேற்றுவதற்காக 1906 ஆள்நுழைவு தொட்டிகள், 4 கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.உளுந்துார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.. நகரச் செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம் குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் மணிராஜ், பழனிவேல், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் செல்வகுமார், அய்யூப்அலி, ஜெயச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் பூட்டோ, வார்டு செயலாளர்கள் பூக்கடை முருகன், வெங்கடேசன், எம்.ஜி.ஆர். மன்ற நகர துணைச் செயலாளர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமலிங்கம், ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE