பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் பேரூராட்சியில் சுங்க வரி ஏலம் விடப்பட்டது

Added : பிப் 23, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் பேரூராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுங்க வரி ஏலம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் சாலையோர கடைகளுக்கு சுங்கம் வசூலித்தல்,பஸ் நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிவறை வசூல்,வாரசந்தை வசூல், பேருந்து சுங்க வரி போன்ற இனங்களுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சம்பத்குமார் முன்னிலையில்

சங்கராபுரம் : சங்கராபுரம் பேரூராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுங்க வரி ஏலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் சாலையோர கடைகளுக்கு சுங்கம் வசூலித்தல்,பஸ் நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிவறை வசூல்,வாரசந்தை வசூல், பேருந்து சுங்க வரி போன்ற இனங்களுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சம்பத்குமார் முன்னிலையில் நடந்தது.இதில் சாலையோர சுங்க வசூல் 8.75 லட்சம் ரூபாய்க்கும் , பஸ் நிலைய நவீன கழிவறை கட்டண வசூல் 6.95 லட்சம் ரூபாய்க்கும் ,வாரசந்தை 3.50 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.பேருந்து சுங்க வசூல் யாரும் ஏலம் கேட்காததால் ஒத்திவைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வினாயகம், சப் இன்ஸ்பெக்டர் திருமால் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X