சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோரிக்கை! தியாகதுருகம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த...போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் நகரில் இட நெருக்கடியுடன் அகலம் குறைவாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அகலம் குறைவாக இட நெருக்கடியுடன் அமைந்துள்ள இச்சாலையில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை ஒட்டி அமைந்துள்ள

தியாகதுருகம் : தியாகதுருகம் நகரில் இட நெருக்கடியுடன் அகலம் குறைவாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அகலம் குறைவாக இட நெருக்கடியுடன் அமைந்துள்ள இச்சாலையில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைகாரர்கள் விற்பனைப் பொருட்கள் மற்றும் பெயர் பலகையை வைத்து ஆக்கிரமித்து உள்ளனர்.கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் பாதசாரிகள் செல்வதற்கு சாலையோரம் இடம் இன்றி தவிக்கின்றனர்.

சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் எதிரெதிரே இரு கனரக வாகனங்கள் கடந்து செல்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது.இதனால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை தொடர் கதையாக உள்ளது. நகருக்குள் வரும் வாகனங்களை குறைக்கும் நோக்கில் புறவழி சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை. தாறுமாறாக செல்லும் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தி வாடிக்கையாளர்களை ஏற்றுவதால் மற்ற வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரங்களில் போலீசார் கண்காணிப்பு இல்லாததால் நகருக்குள் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி திக்குமுக்காட வேண்டிய நிலை உள்ளது. இதற்குத் தீர்வாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு சாலையின் அகலத்தை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் என பலமுறை அறிவிக்கப்பட்டு அது பாதியிலேயே கைவிடப்பட்டது.

தற்போது கரும்பு அறுவடை துவங்கியுள்ளதால் கரும்பு ஏற்றிவரும் டிராக்டர்கள் நகரின் வழியே செல்லும்போது போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்படும்.இதை தவிர்க்க நகரின் வழியே கரும்பு ஏற்றிய டிராக்டர்கள் செல்ல தடை விதித்து மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தியாகதுருகம் நகரின் நீண்ட கால பிரச்னையாக உள்ள போக்குவரத்து சிக்கலை தீர்க்க சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X