ஒரு செயலில் ஈடுபடும் போது பயம் மற்றும் சந்தேகத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா? அல்லது ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறையான கண்ணோட்டத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா? என்ற இரண்டு கேள்விகளை நீங்கள் ஆராய்ந்து உணர்ந்தாலே போதும். யார் ஒருவர் நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறார்களோ அவருக்கே வெற்றி வசமாகும் என்பது தான் உண்மை.வகுப்பறைகளில் ஆசிரியரது நேரடி கண்காணிப்பில் இருக்கும்போதே, மாணவர்களது கவனம் அதிகளவில் சிதறும் நிலையில், கடந்த பல மாதங்களாக ஆன்லைன் வாயிலான கல்வியில் மாணவர்களின் கவனச் சிதறல்களுக்கு கணக்கில்லை. எந்த ஒரு மாணவர் மீதும், யாராலும், எப்போதும் கவனத்தை செலுத்தி கொண்டிருக்க முடியாது. எந்த ஒரு கண்காணிப்பும் இன்றி, சுய ஆர்வத்துடன் மாணவர்கள் கல்வி கற்பது மிக அவசியம்.ஆகவே, நேர்மையும், நேர்மறை சிந்தனையும், நிச்சயம் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். கல்வியிலும், தேர்விலும் நேர்மறையான சிந்தனையோடு செயல்பட்டு வெற்றி அடைய வாழ்த்துக்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE