கல்வி கற்பதையும், கற்கும் பள்ளியையும் மாணவர்கள் எப்போது கொண்டாட ஆரம்பிக்கிறார்களே அதில்தான் பள்ளியின் தரம் உள்ளது. நாங்கள் முதலில் மாணவர்களிடம் இருந்த கூச்சம், பயம், தாழ்வு மனப்பான்மை அனைத்தையும் துாக்கி எறிகிறோம்.அவர்களுக்கு தேவையானதை அவர்களே தைரியமாக கேட்கும் அளவுக்கு மனதளவில் தயார் படுத்துகிறோம். இதனாலே மாணவர்கள் தங்கள் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு பயன்பெறுகின்றனர் என்கிறார், திருப்பூர் - சோளிபாளையத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளி செயலாளர் ஹேமா.அவர் மேலும் கூறியதாவது:தேசிய அளவில் வழங்கப்படும், என்.சி.எப்., பாடத்திட்டம் பள்ளியில் வழங்குகிறோம். எந்த துறையில் ஜொலிக்க விரும்புகிறார்களே, அதற்கான வாய்ப்பை அனைத்து வகையில் ஏற்படுத்தி தருகிறோம். குழந்தைகளின் ஆர்வத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்தி வருகிறோம்.ஒரு செடியை எடுத்து, வேறு இடத்தில் நடுவதுபோல், குழந்தையை திடீரென வேறு பள்ளிக்கு மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிய பள்ளி சூழலை உள்வாங்க குழந்தை நீண்ட காலம் எடுக்கும். உளவியல் தாக்கத்தை பெற்றோர் உணர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE