நான்கு கால் மண்டபம் வாலாஜாபாதில் சீரமைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு கால் மண்டபம் வாலாஜாபாதில் சீரமைப்பு 

Added : பிப் 23, 2021
Share
வாலாஜாபாத் : இளையனார்வேலுார் பால சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், சேதமடைந்த நான்கு கால் மண்டப மேற்கூரை, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. வாலாஜாபாத் அடுத்த, இளையனார்வேலுார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், கருங்கற்களால் ஆன, நான்கு கால் மண்டபம் உள்ளது.இதன் மேற்கூரை, திருவாச்சி என,

வாலாஜாபாத் : இளையனார்வேலுார் பால சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், சேதமடைந்த நான்கு கால் மண்டப மேற்கூரை, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

வாலாஜாபாத் அடுத்த, இளையனார்வேலுார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், கருங்கற்களால் ஆன, நான்கு கால் மண்டபம் உள்ளது.இதன் மேற்கூரை, திருவாச்சி என, அழைக்கப்படும் வளைவு, சில மாதங்களுக்கு முன் சேதமடைந்து விழுந்தது. கொரோனா ஊரடங்கில், பக்தர்கள்வருகை இல்லாததால்சீரமைக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ந ன்கொடையாளர், ஒருவரின் உதவியுடன், சேதமடைந்த நான்கு கால் மண்டபம், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X