திருப்பூரில் நடக்கும் எந்த விழாவும், போட்டியும் 'திருப்பூர் டிராபி' இல்லாமல் முற்று பெறுவதில்லை. அந்தளவு, திருப்பூரிலே, 800க்கும் மேற்பட்ட கோப்பை ரகங்களுடன், தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது, எஸ்.ஏ.பி., தியேட்டர் அருகேயுள்ள, 'திருப்பூர் டிராபி' விற்பனையகம்.இதுகுறித்து, அதன் நிர்வாகி கண்ணன் கூறியதாவது:கார்மென்ட்ஸ் நிறுவன விழா, பள்ளி மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் போட்டிகளுக்கு மட்டுமே பரிசாக கோப்பை, கேடயங்கள் பயன்படும் என்றில்லை. கல்யாணம், பிறந்தநாள், போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கும் நினைவு பரிசாக வழங்கலாம். சிலர் சிறந்த அம்மா, சிறந்த மகள் என்ற தீமிலும் ஆடர் அடிப்படையில் கோப்பைகளை வடிவமைத்து வாங்கி சென்றுள்ளனர்.இரண்டு இன்ச் முதல், 6 அடி வரையில், குறைந்தது, 50 ரூபாய் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரையில் டிராபி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பத்திற்கேற்ப டிசைன் செய்து பெறலாம். பலர் தங்கள் நிறுவனத்தில் நீண்ட நாள் விடுமுறை எடுக்காமல் பணிபுரிபவர்களை ஊக்கவிக்கவும் டிராபி தருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE