'குழந்தைகளை ப்ரீ.கே.ஜி., - எல்.கே.ஜி.,யிலிருந்தே ரேஸில் ஓட விடுவது தவறு. குழந்தைகளை அவர்களின் மகிழ்ச்சியான உலகிலே பாடம் சொல்லித்தருவதே எங்கள் நோக்கம். வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கல்வி அளிக்கிறோம்' என்கிறார் அத்வைதா இன்டர்நேசனல் பள்ளி தாளாளர் ரத்தின திவ்யா.இது குறித்து அவர் கூறியதாவது:குழந்தைளுக்கு ஆரம்பத்திலேயே அழுத்தம் தரக்கூடாது. இது முழுக்க முழுக்க மெட்டீரியல்ஸ் அடிப்படையிலான கல்வி. ஒரு குழந்தைக்கு அந்த வயதில் எதை கொடுக்கணுங்கறது உணர்ந்து கொடுப்போம். ஒரு மாதத்தில் இவ்ளோ சிலபஸ் முடிக்கணுங்கற கட்டாயம் கிடையாது.குழந்தைக்கு புரியும் வரையில் காத்திருந்து கூடுதல் சொல்லிக்கொடுப்போம். கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் அளிக்கிறோம்.விருதுகள், பதக்கம் கிடையாது. மதிப்பெண், பாஸ், பெயில் எந்த விஷயமும் இங்கில்லை. குழந்தைகள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்ய, 'ஒர்க் ஜார்னல்' சீட் தயாரிக்க வேண்டும். தினசரி செயல்பாடுகளை குறிப்பு எழுத வைக்கிறோம்.இரண்டு வயது முதல் மாண்டிசோரி முறையில் பயிற்சி வழங்கப்படுகின்றன. மூன்றாம் வகுப்பு முதல் சி.பி.எஸ்.இ., - மாண்டிசோரி இரண்டும் உண்டு. பயிற்சி பெற்ற ஆசிரியர்களால், விளையாட்டு மூலம் கல்வி கற்பிக்கப்படும்.இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் லேப், டான்ஸ் ஸ்டுடியோ, கணிதம் மற்றும் மொழி ஆய்வகம், ஆடியோ விஷுவல் மற்றும் டிஸ்கவரி அறைகள் உள்ளன. ஒரு நாளைக்கு, ஓர் ஆசிரியர், தினமும், 8 மணி நேரம் 'ஆன்லைன்' வகுப்பு நடத்துகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE