பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்கு செல்லும் சாலை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், கைலாச நாதர் கோவிலுக்கு செல்லும் வழியில், தொன்மை யான அனேகதங்காதேஸ்வரர் கோவில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் பெய்த பருவ மழையின்போது, கைலாசநாதர் கோவில் பகுதியில் மழை நீர் தேங்கியது.தண்ணீர் செல்ல, வழிஇல்லாததால், நகராட்சி ஊழியர்கள், கோவிலுக்கு செல்லும் சிமென்ட் சாலையை உடைத்து, வழி ஏற்படுத்தினர்.இதையடுத்து, இச்சாலையை சீரமைக்காததால்,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், கைலாச நாதர் கோவிலுக்கு செல்லும் வழியில், தொன்மை யான அனேகதங்காதேஸ்வரர் கோவில் உள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன் பெய்த பருவ மழையின்போது, கைலாசநாதர் கோவில் பகுதியில் மழை நீர் தேங்கியது.தண்ணீர் செல்ல, வழிஇல்லாததால், நகராட்சி ஊழியர்கள், கோவிலுக்கு செல்லும் சிமென்ட் சாலையை உடைத்து, வழி ஏற்படுத்தினர்.இதையடுத்து, இச்சாலையை சீரமைக்காததால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு, விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனாலும், நகராட்சி, நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனது.இதனால், அதே பகுதி சமூக ஆர்வலர்கள் ஒன்றாக சேர்ந்து, சாலையை சீரமைத்துள்ளனர். மழை நீர்செல்ல வசதியாக, சிமென்ட் குழாய் பதித்து, அதன் மீது மண்ணை கொட்டி சீர்படுத்தி உள்ளனர். விரைவில், சிமென்ட் தளம் அமைக்க உள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X