ஊரே லாக்டவுனில் முடங்கியிருந்த சமயம், அதிநவீன 'இ-பாக்ஸ்' தொழில்நுட்ப சேவை மூலம் மூன்றே மாதத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைஆன்லைன் மூலமே நடத்தி முடித்துள்ளோம்' என, பெருமிதத்துடன் கூறுகிறார், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளி சேர்மன் ஆண்டவர் ராமசாமி.அவர் மேலும், கூறியதாவது:உயர்கல்வி, அரசு இலவச 'நீட்' பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மட்டும் ஊரடங்கு சமயத்தில் இ-பாக்ஸ் தொழில்நுட்ப சேவை பரவலாக பயன்பாட்டில் இருந்தது. பள்ளி கல்வி அளவில், இச்சேவையை பிரத்யேக குழுக்களை வரவழைத்து எங்கள் பள்ளியில் சாத்தியப்படுத்தினோம்.சென்னை, கோவை, ஹைதராபாத் தலைமையிடத்தில் இருந்து ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகளில் வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட லேப்டாப் வழங்கினோம்.மாணவர்களுக்கு கற்பித்தல் திறனை இங்குள்ள ஆசிரியர்கள் கண்காணித்து வழிநடத்த வேண்டும். தினமும், காலை, 9:00 முதல், 10:00 மணி வரை டெஸ்ட் நடக்கும். இதற்கான, மதிப்பீடு 'வாட்ஸ் அப்பில்', 5 நிமிடத்தில் மேற்கொள்ளப்படும்.பள்ளி துவங்கிய நாள் முதல் பெரிய ஆடிட்டோரியத்தில் சமூக இடைவெளியுடன் அமர வைத்து திருப்புதல் தேர்வு நடத்தி வருகிறோம். வீட்டில் மொபைல் போன் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகிவிட்டனர். இதற்காகவே பள்ளியில் மொபைல்போன் பயன்படுத்த தடை செய்துள்ளோம்.தற்போது, அனைத்து வகுப்புக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 'மாணவர்களின் தரம், ஆசிரியர்களின் அனுபவம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்' இம்மூன்றை வைத்தே ஒரு கல்வி நிறுவனம் எப்படிப்பட்டது என அறிந்துகொள்ள முடியும்.அவ்வகையில், விகாஸ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் தனக்கான முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE