உலக தர கல்வி நிறுவனமான, 'லீட்' பள்ளியுடன் இணைந்து சாதாரண கட்டணத்தில் சி.பி.எஸ்.இ., தர கல்வியை அளிக்க காத்திருக்கிறது கணியாம்பூண்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்ரீ செந்துார் வித்யாலயா மெட்ரிக் பள்ளி.பள்ளியின் சிறப்பு குறித்து தாளாளர் முருகசாமி கூறியதாவது:மாணவர்களுக்கு இயற்கையான கற்றல் சூழல் அவசியம். இதற்காகவே, 20 ஏக்கர் அளவில் பள்ளியை கட்டமைத்துள்ளோம்.கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் மதிப்புசார் கல்வி இங்குண்டு. மாணவர்களிடம் இயற்கை விவசாய முறை பற்றிய மதிப்பு மற்றும் இன்றியமையாமையை விதைத்திட, 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாய மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.மழலையருக்கான மாண்டிசோரி வழிக்கல்வி, சிறப்பு விளையாட்டு பூங்கா பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்தர நுாலகம், ஆய்வகங்கள் உள்ளன. சாரண, சாரணியர், ஜூனியர் ரெட் கிராஸ், இகோ கிளப்கள் அமைக்கப்படும்.செஸ், கேரம், கணினி, கணிதம், அறிவியல் மற்றும் பசுமை பூமி மன்றங்கள் மூலம் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். போனிக்ஸ், அபாகஸ், இந்தி, சமஸ்கிருதம், ஆர்ட் மற்றும் கிராப்ட், யோகா, நடனம், சிலம்பம், கராத்தே என, சிறப்பு வகுப்புகள் வழங்கப்படுகின்றன.விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மார்ச், 31க்குள் அட்மிஷன் செய்தாலும், பள்ளியில் இருந்து, 10 கி.மீ., தொலைவிற்குள் பஸ் கட்டணம் முழுவதும் இலவசம். தற்போது எல்.கே.ஜி., முதல் முன்பதிவு நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE