மனித வாழ்வில் வெற்றிபெற உடலும், மனமும் சேர்ந்து, சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். இரண்டில் ஒன்று சோர்ந்து போனாலும்கூட, நம்மால் சுமூகமாக இயங்க முடிவதில்லை. உடல் நலம் சரியில்லாததாலும், மனம் தொடர்பான பல பிரச்னைகளாலும் ஏராளமான பேர் வாழ்க்கையில் தோல்வியடைந்துள்ளனர். எனவே உடல்-மனம் ஆகிய இரண்டையும் இணக்கமாக அதேசமயம் சுறுசுறுப்பாக இயக்க வேண்டிய வித்தையை மாணவர்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.சிலருக்கு உடலில் சில நீண்டகால நோய்கள் இருக்கலாம். அதேபோன்று சிலருக்கு இயல்பிலேயே மனச்சோர்வு, பய உணர்வு, கவலை போன்ற மனம் சார்ந்த சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், இவற்றால் ஒருவர் வாழ்க்கையில் தோல்வியடைய வேண்டியதில்லை. இந்த குறைபாடுகளை வெற்றிகொண்டு, வாழ்வில் சாதனைகள் பல படைக்கலாம்.சில எளிய பயிற்சிகளின் மூலம் நாம் இதை சாதிக்கலாம். உடற்பயிற்சி என்றாலே, பல பெரிய உடற்பயிற்சி சாதனங்கள் உடைய "ஜிம்" சென்று கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. மேலும், உடல் பயிற்சி கூடங்களில் அதிக நேரமும், உழைப்பும் தேவைப்படுகிறது. பயிற்சியை தொடர்ந்து செய்வது பலருக்கு சிரமமாகவும், எரிச்சலாகவும், நேரமின்றியும் இருக்கும். எனவே எளிமையான மற்றும் சிறந்த பயிற்சிகளே அனைவருக்கும் ஏற்றது.சிறந்த பயிற்சிகள்ஓடுதல், நீச்சலடித்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவை எளிமையான சிறந்த பயிற்சிகள். மரங்கள் அடங்கிய திறந்த வெளியில் பயிற்சியில் ஈடுபடுவது சிறப்பான பலனைத் தரும். இதன்மூலம் உங்களுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும். மேலும் இசையுடன் சேர்ந்து பயிற்சி செய்து பழகலாம். இதன்மூலம் பயிற்சி செய்வது நமக்கு சிரமமான ஒன்றாகவே தெரியாது. நமது ஆர்வமும் அதிகரிக்கும். இதைத்தவிர, வலது-இடது மூளை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான மூளை பயிற்சியிலும் ஈடுபடலாம்.பயிற்சியானது, உங்களின் டென்சனை குறைத்து ரிலாக்சாக வைத்திருக்கிறது. உடற்பயிற்சியின் மூலம் உங்களின் உற்சாகம் அதிகரிக்கிறது. இத்தகைய பயிற்சிகளை தொடர்ந்து செய்வது முக்கியம். இதன்மூலம் நீங்கள் அதிக பலன் பெற்று, அந்த பயிற்சிகளுக்கு உங்களை அறியாமல் அடிமையாகி விடுவீர்கள். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவீர்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE