பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றம் கற்றல் முறை குறித்து சிலாகிப்பு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கொரோனா ஏற்படுத்திய பல மாற்றங்களில் முக்கியமானது ஆன்லைன் கல்வி. தொழில்நுட்ப ரீதியாக கல்வித்துறையை மேம்படுத்தியுள்ளது என்கிறார்,' ஏ.வி.பி., கல்வி நிறுவன தாளாளர் கார்த்திகேயன்.அவர் தொடர்ந்து கூறியதாவது:'ஆன்லைனில்' கற்பிக்கும் போது, மாணவர்கள் குறிப்பெடுக்க நிறைய வாய்ப்புகளை தொழில்நுட்ப ஊடகங்கள் உருவாக்கி தந்தன. 'ஆன்லைன்' கல்வியில், பி.டி.எப்., பைல், பி.பி.டி.,

கொரோனா ஏற்படுத்திய பல மாற்றங்களில் முக்கியமானது ஆன்லைன் கல்வி. தொழில்நுட்ப ரீதியாக கல்வித்துறையை மேம்படுத்தியுள்ளது என்கிறார்,' ஏ.வி.பி., கல்வி நிறுவன தாளாளர் கார்த்திகேயன்.அவர் தொடர்ந்து கூறியதாவது:'ஆன்லைனில்' கற்பிக்கும் போது, மாணவர்கள் குறிப்பெடுக்க நிறைய வாய்ப்புகளை தொழில்நுட்ப ஊடகங்கள் உருவாக்கி தந்தன. 'ஆன்லைன்' கல்வியில், பி.டி.எப்., பைல், பி.பி.டி., பிரசென்டேசன் முக்கிய இடம் வகித்தன. இதனை சாதாரணமாக கணினி ஆசிரியர் மட்டுமே அறிய வாய்ப்புள்ளது. அனைத்து பாட ஆசியர்களுக்கும் நாங்கள் சிறப்பு ஐ.டி., குழு உருவாக்கி பயிற்சி அளித்தோம்.அவ்வகையில், 'லாக்டவுனில்' தொழில்நுட்பங்களை கையாளுவதில் தேர்ந்தவர்களாக ஆசிரியர்கள் மாறியுள்ளனர். தற்போது, 'கிண்டர் கார்டன்' பள்ளி அட்மிஷன் நடக்கிறது.போட்டி நிறைந்த இவ்வுலகில் தனக்கான திறமையையும், தகுதியையும் வளர்த்துக் கொள்வதன் அவசியத்தை இளமையிலே உணர்த்தி விடுவதால், குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் நல்ல இடத்தை அடைந்து வருகின்றனர்.இவ்வாறு, கார்த்திகேயன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X