பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்///

Added : பிப் 23, 2021
Share
Advertisement
மரங்கள் நாளை ஏலம்வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு சொந்தமாக, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஆறு புளிய மரங்கள் மற்றும் கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில், இரு புளிய மரங்கள் என, மொத்தம் எட்டு மரங்கள் உள்ளன.இவற்றில், பழங்கள் அறுவடை செய்வதற்கான

மரங்கள் நாளை ஏலம்வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு சொந்தமாக, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஆறு புளிய மரங்கள் மற்றும் கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில், இரு புளிய மரங்கள் என, மொத்தம் எட்டு மரங்கள் உள்ளன.இவற்றில், பழங்கள் அறுவடை செய்வதற்கான குத்தகை ஏலம், கடந்த, 16ம் தேதி நடக்கவிருந்தது. அன்று, உத்திரமேரூர் சரக ஆய்வாளர் வராததால், ஏலம் நிறுத்தப்பட்டது. அவர் தலைமையில், நாளை, ஏலம் நடக்கிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுப்பாக்கத்தில் மீன் வளர்ப்புவாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி குளங்களில் மீன் வளர்க்கப் படும். அதன்படி, வாலாஜாபாத் மற்றும் குன்றத்துார் என, இரு ஒன்றியங்களிலும், 2.47 ஏக்கர் அடங்கிய, 1 ஹெக்டேர் பரப்பளவு இருக்கும், ஒன்பது குளங்களில், தலா, 5,000 மீன் குஞ்சுகள் என, மொத்தம், 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட உள்ளன.முதற்கட்டமாக, வாலாஜாபாத் ஒன்றியம், புதுப்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான பிள்ளையார்கோவில் குளத்தில், நேற்று, 4,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதை, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி துவக்கி வைத்தார்.

நுகர்வோர் சங்க கூட்டம்உத்திரமேரூர்: நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம், உத்திரமேரூரில் நடந்தது. சங்க தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வாகனங்களில், சிலிண்டரின் விலையை கட்டாயம் ஒட்ட வேண்டும். காஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய கூடுதல் பணம் வாங்கக் கூடாது. உத்திரமேரூர் பைபாஸ் சாலை பணியை உடனடியாக துவங்க வேண்டும் என்பன உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பள்ளிக்கு புதிய கட்டடம்குண்ணத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், நுங்கம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது, குண்ணத்துார். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.கடந்த, 1954ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தொடக்கப் பள்ளி கட்டடம் மிகவும் சேதமடைந்து, மோசமான நிலையில் இருந்ததால், மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, ஒன்றிய நிர்வாகம் ஆய்வு செய்து, ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாடு திட்டத்தின்கீழ், 17.32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதைத் தொடர்ந்து, சேதமடைந்த பள்ளி வகுப்பறை கட்டடத்திற்கு, புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X