திருப்பூர்:குப்பைக்கு தீ வைப்பது தொடர்கதையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தள்ளு வண்டிகளில் சேகரமாகும் குப்பைகளை ஊழியர்கள் குப்பை தொட்டி, ரோட்டோரம் ஏதாவது இடத்தில் கொட்டுவர்.அவை, வாகனங்கள் மூலம் அகற்றப்படுவது வழக்கம். ஆனால், இதுபோல் சேகரமாகும் குப்பையை முறையாக சில இடத்தில் அப்புறப்படுத்துவதில்லை. ஊழியர்களோ, அப்பகுதியில் உள்ளவர்களோ குவித்து வைத்து தீப்பற்ற வைப்பது வாடிக்கையாக உள்ளது.அவ்வகையில், திருப்பூர் - மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் செந்தில் சைசிங் பஸ் ஸ்டாப்பில், ரோட்டோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைக்கு தீ வைத்து சென்றனர். இதனால், மக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். ரோட்டில் கரும்புகை பரவியது.துர்நாற்றமும், புகை மண்டலமும் அப்பகுதியினருக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தியது. சேகரமாகும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE