முள் சீதா சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராஜு கூறியதாவது:முள் சீதா மருத்துவக் குணங்கள் நிறைந்த பழம். இது, அமேசான் காடுகள், பிலிப்பைன்ஸ், மலேஷியா, மெக்சிகோ, ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
நம் நாட்டில், கேரளா, கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். அந்த வரிசையில், நானும் முள் சீதா செடியை, வரப்பு பயிராக நட்டுள்ளேன்.இது, பழங்கள் வரும் வரையில் வருவாய்க்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. செடி நட்டு இலைகள் வந்தால் போதும், இலைகளில் வருவாய் பார்க்க துவங்கி விடலாம்.புற்று நோய்க்கு, அருமருந்தாக இலைகள் இருப்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
சந்தைப்படுத்தும் திறனை மேம்படுத்தினால், முள் சீதா பழத்தில், பல 'லகரங்களை' வருவாயாக பார்க்கலாம்.எடையை தவிர்த்து, எண்ணிக்கையில் தான் விற்கப்படுகிறது. ஒரு பழம், 700 ரூபாய் வரை விலை கிடைக்கிறது என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். அந்த அளவிற்கு, முள் சீதா பழத்திற்கு சந்தையில் தட்டுப்பாடு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 89402 22567
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE