என்.எச்., ரோடு விரிவாக்கம்: கருத்துரு அனுப்ப ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.எச்., ரோடு விரிவாக்கம்: கருத்துரு அனுப்ப ஆய்வு

Added : பிப் 23, 2021
Share
பல்லடம்:பல்லடம் என்.எச்.,ரோடு விரிவாக்கம் செய்வதற்கான கருத்துரு அனுப்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பல்லடத்தில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீண்ட காலமாகியும் வாகன பெருக்கத்துக்கு இணையாக, ரோடு விரிவாக்கம் செய்யப்படாததே இதற்கு காரணம். இதனால், அதிகரித்துள்ள விபத்துகளை தொடர்ந்து, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.விபத்துக்களை தடுக்க ரோடு

பல்லடம்:பல்லடம் என்.எச்.,ரோடு விரிவாக்கம் செய்வதற்கான கருத்துரு அனுப்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பல்லடத்தில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீண்ட காலமாகியும் வாகன பெருக்கத்துக்கு இணையாக, ரோடு விரிவாக்கம் செய்யப்படாததே இதற்கு காரணம். இதனால், அதிகரித்துள்ள விபத்துகளை தொடர்ந்து, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.விபத்துக்களை தடுக்க ரோடு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இச்சூழலில், கருத்துரு அனுப்ப வேண்டி என்.எச்., ரோட்டில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா கூறுகையில்,''என்.எச்., ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, அரசுக்குகருத்துரு அனுப்பும் பணி நடந்து வருகிறது. அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலை இணைப்புகளில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X