பொது செய்தி

தமிழ்நாடு

காடை வளர்ப்பில் கல்லா கட்டலாம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
காடை வளர்ப்பு குறித்து, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மண்ணுார் கிராமத்தைச் சேர்ந்த ஆங்கில பட்டதாரி பெண் விவசாயி, ஜெ.சங்கீதா கூறியதாவது:காடை வளர்ப்பு, விவசாயத்தில் ஒரு மாற்று தொழில். காடை இறைச்சி மற்றும் முட்டையை, அதிக விலை கொடுத்து, மக்கள் வாங்க தயக்கம் காட்டுவதில்லை. அதிக மருத்துவக் குணம் நிரம்பியிருப்பதால், அதற்கு மவுசு இருக்கிறது.குறிப்பாக, நாட்டுக் கோழி முட்டையில்,

காடை வளர்ப்பு குறித்து, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மண்ணுார் கிராமத்தைச் சேர்ந்த ஆங்கில பட்டதாரி பெண் விவசாயி, ஜெ.சங்கீதா கூறியதாவது:காடை வளர்ப்பு, விவசாயத்தில் ஒரு மாற்று தொழில். காடை இறைச்சி மற்றும் முட்டையை, அதிக விலை கொடுத்து, மக்கள் வாங்க தயக்கம் காட்டுவதில்லை.

அதிக மருத்துவக் குணம் நிரம்பியிருப்பதால், அதற்கு மவுசு இருக்கிறது.குறிப்பாக, நாட்டுக் கோழி முட்டையில், 11 சதவீதம் புரதச்சத்து உள்ளது. காடை முட்டையில், 13 சதவீதம் புரதச்சத்து கிடைக்கிறது.கர்ப்பக் காலத்தில், கருவில் வளரும் குழந்தையின் எலும்பை உறுதியாக்க, காடை முட்டை பெரிதும் உதவுகிறது. மேலும், கண் பார்வை குறைபாடு, புற்று நோய், ரத்த சோகை, பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது. இதனால், சந்தையில் பெரிதும் வரவேற்பு உள்ளது.மொத்தமாக, காடை முட்டை மற்றும் இறைச்சி விற்பனை செய்யும்போது, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டலாம். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 94459 33600

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X