சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திறப்பு விழா காணாமல் வீணாகும்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : தண்டலை ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறப்பு விழா காணாததால் சுற்றுப்புறங்கள் புதர் மண்டி வீணாகி வருகிறது. கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை ஊராட்சி அலுவலகம் மிகவும் பழமையானதாக இருந்ததால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மகாத்மா காந்தி வேலை உறுதி (2018-19) திட்டத்தின்கீழ் புதிதாக 17.64 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம்

கள்ளக்குறிச்சி : தண்டலை ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறப்பு விழா காணாததால் சுற்றுப்புறங்கள் புதர் மண்டி வீணாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை ஊராட்சி அலுவலகம் மிகவும் பழமையானதாக இருந்ததால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மகாத்மா காந்தி வேலை உறுதி (2018-19) திட்டத்தின்கீழ் புதிதாக 17.64 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. கட்டி முடிந்து பல மாதங்களாகியும் இதனை முறையாக திறந்து பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. ஆரம்ப சுகாதார மையம், நுாலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் கொண்ட பகுதியில் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பதால் அதனை சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. ஊராட்சிகள் துறை அதிகாரிகள் தலையிட்டு, ஊராட்சி அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X