எரியாத 'ஐ மாஸ்'

Added : பிப் 23, 2021
Share
Advertisement
எரியாத 'ஐ மாஸ்'திருப்பூர் ரயில்வே கூட்ஸ்ெஷட் சந்திப்பில் உள்ள 'ஐ மாஸ்' லைட் ஒரு மாதமாக எரிவதில்லை. எரியாத விளக்குளை மாற்றி புதிய விளக்கு அமைக்க வேண்டும்.-சுப்ரமணி, ராயபுரம்.குப்பை அள்ளுங்க1. திருப்பூர், வாவிபாளையம், துவக்கப்பள்ளி எதிரில், பாப்பநாயக்கனுார் சாலையில் குப்பை கொட்டுகின்றனர். அடிக்கடி தீ வைத்து எரிப்பதால், பலரும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.

எரியாத 'ஐ மாஸ்'திருப்பூர் ரயில்வே கூட்ஸ்ெஷட் சந்திப்பில் உள்ள 'ஐ மாஸ்' லைட் ஒரு மாதமாக எரிவதில்லை. எரியாத விளக்குளை மாற்றி புதிய விளக்கு அமைக்க வேண்டும்.-சுப்ரமணி, ராயபுரம்.குப்பை அள்ளுங்க1. திருப்பூர், வாவிபாளையம், துவக்கப்பள்ளி எதிரில், பாப்பநாயக்கனுார் சாலையில் குப்பை கொட்டுகின்றனர். அடிக்கடி தீ வைத்து எரிப்பதால், பலரும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்.-மூர்த்தி, வாவிபாளையம்.2. திருப்பூர், ரயில்வே மேம்பாலம் கீழ், குமரன் வணிக வளாகத்தை சுற்றி குப்பை தேங்கியுள்ளது. மரத்திலிருந்து விழும் இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது. குப்பை அள்ள வேண்டும்.-பாலசுப்ரமணியம், திருப்பூர்.வினியோகத்தில் தாமதம்திருப்பூர், 23 வது வார்டு, கோல்டன் நகர், கருணாகரபுரியில் குடிநீர் வினியோகம் செய்து, 15 நாட்களாகிறது. குடிநீருக்கு பெண்கள் அலைகின்றனர். வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்க வேண்டும்.-பன்னீர்செல்வம், கருணாகரபுரி.பணிகள் படுமந்தம்திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் பணி படுமந்தமாக நடக்கிறது. வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. விரைந்து முடித்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்.-சக்கரபாணி, காலேஜ் ரோடு.விபத்துக்கு உத்தரவாதம்1.சுல்தான்பேட்டையில் இருந்து செஞ்சேரி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. நடுரோட்டில் உள்ள குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.- தங்கப்பன், சுல்தான்பேட்டை.2. திருப்பூர் புதுார் பிரிவில் இருந்து கரட்டாங்காடு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக மாறி வருகிறது. உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து, புதிய சாலை அமைக்க வேண்டும்.- செந்தில்குமார், புதுார் பிரிவு.கொசுப்பண்ணை தயார்செஞ்சேரிமலையில் இருந்து கொடுவாய் செல்லும் ரோட்டில், அம்மன் கோவில் பின்புறம் கழிவுநீர் தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.- ராஜா, செஞ்சேரிமலை.இருள்மயம்... திருடர் பயம்திருப்பூர் - பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப்பில் இருந்து வித்யாலயம் வரை தெருவிளக்கு எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது.-மனோகரன், பல்லடம் ரோடு.சுகாதாரம் என்ன விலை!சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி முதல்வீதியில் குப்பை அள்ளி, 15 நாட்களாகிறது. குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- வேலுமணி, செல்லம்மாள் காலனி.குடிநீர் சப்ளை செய்யணும்!திருப்பூர், 22வது வார்டு, வ.உ.சி., நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகித்து, இரு வாரங்களாகிறது. வாரம் ஒருமுறையா வது குடிநீர் வினியோகிக்க வேண்டும்.-பாலசுப்ரமணியம், வ.உ.சி., நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X