எரியாத 'ஐ மாஸ்'திருப்பூர் ரயில்வே கூட்ஸ்ெஷட் சந்திப்பில் உள்ள 'ஐ மாஸ்' லைட் ஒரு மாதமாக எரிவதில்லை. எரியாத விளக்குளை மாற்றி புதிய விளக்கு அமைக்க வேண்டும்.-சுப்ரமணி, ராயபுரம்.குப்பை அள்ளுங்க1. திருப்பூர், வாவிபாளையம், துவக்கப்பள்ளி எதிரில், பாப்பநாயக்கனுார் சாலையில் குப்பை கொட்டுகின்றனர். அடிக்கடி தீ வைத்து எரிப்பதால், பலரும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்.-மூர்த்தி, வாவிபாளையம்.2. திருப்பூர், ரயில்வே மேம்பாலம் கீழ், குமரன் வணிக வளாகத்தை சுற்றி குப்பை தேங்கியுள்ளது. மரத்திலிருந்து விழும் இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது. குப்பை அள்ள வேண்டும்.-பாலசுப்ரமணியம், திருப்பூர்.வினியோகத்தில் தாமதம்திருப்பூர், 23 வது வார்டு, கோல்டன் நகர், கருணாகரபுரியில் குடிநீர் வினியோகம் செய்து, 15 நாட்களாகிறது. குடிநீருக்கு பெண்கள் அலைகின்றனர். வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்க வேண்டும்.-பன்னீர்செல்வம், கருணாகரபுரி.பணிகள் படுமந்தம்திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் பணி படுமந்தமாக நடக்கிறது. வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. விரைந்து முடித்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்.-சக்கரபாணி, காலேஜ் ரோடு.விபத்துக்கு உத்தரவாதம்1.சுல்தான்பேட்டையில் இருந்து செஞ்சேரி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. நடுரோட்டில் உள்ள குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.- தங்கப்பன், சுல்தான்பேட்டை.2. திருப்பூர் புதுார் பிரிவில் இருந்து கரட்டாங்காடு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக மாறி வருகிறது. உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து, புதிய சாலை அமைக்க வேண்டும்.- செந்தில்குமார், புதுார் பிரிவு.கொசுப்பண்ணை தயார்செஞ்சேரிமலையில் இருந்து கொடுவாய் செல்லும் ரோட்டில், அம்மன் கோவில் பின்புறம் கழிவுநீர் தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகரிக்கிறது.- ராஜா, செஞ்சேரிமலை.இருள்மயம்... திருடர் பயம்திருப்பூர் - பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப்பில் இருந்து வித்யாலயம் வரை தெருவிளக்கு எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது.-மனோகரன், பல்லடம் ரோடு.சுகாதாரம் என்ன விலை!சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி முதல்வீதியில் குப்பை அள்ளி, 15 நாட்களாகிறது. குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- வேலுமணி, செல்லம்மாள் காலனி.குடிநீர் சப்ளை செய்யணும்!திருப்பூர், 22வது வார்டு, வ.உ.சி., நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகித்து, இரு வாரங்களாகிறது. வாரம் ஒருமுறையா வது குடிநீர் வினியோகிக்க வேண்டும்.-பாலசுப்ரமணியம், வ.உ.சி., நகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE