திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'வை-பை' வசதி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.பயணிகள் வசதிக்காக நாடு முழுவதும், 200 ரயில்வே ஸ்டேஷன்களில் 'வை-பை' வசதி ரயில்வே அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள் ளது. இப்பட்டியலில் திருப்பூர் இடம் பெற்றதால், ரயில்வே ஸ்டேஷன் முதல், இரண்டாவது பிளாட்பார்ம், பயணிகள் ஓய்வறை, டிக்கெட் புக்கிங் சென்டர் உள்ளிட்ட இடங்களில் கட்டணமில்லா இணையதள சேவை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால், ரயில் இயக்கம் நிறுத்தப்பட்ட போது, 'வை-பை' வசதி நிறுத்தப்பட்டது. ஐந்து மாதமாக சிறப்பு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் பயணிகள் கோரிக்கையை ஏற்று, இலவச'வை-பை' சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பெயர், செல்போன் உள்ளிட்ட சுய விவரங்களை தெரிவிக்க வேண்டும். பயணி ஒருவர் அரைமணி நேரம் மட்டும் இலவச இணையதளத்தை பயன்படுத்த முடியும். ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே இருக்கும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE