திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து, கலெக்டர் விஜய கார்த்திகேயன் அறிக்கை:தாராபுரம் கோட்ட கலால் அலுவலர் முருகதாஸ், கலெக்டர் அலுவலக தேர்தல் தனி தாசில்தாராகவும், அப்பணியில் இருந்த ரவீந்திரன், திருப்பூர் வாணிப கழக கிடங்கு மேலாளராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.வாணிப கழக கிடங்கு மேலாளராக பணியில் இருந்த ரவிச்சந்திரன், தாராபுரம் தாசில்தாராகவும், தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் உடுமலைக்கும், உடுமலையில் இருந்த ஜெய்சிங் சிவக்குமார், திருப்பூர் வடக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.ஊத்துக்குளி தாசில்தார் தமிழ்ச்செல்வன், அவிநாசிக்கும், அங்கு பணியாற்றிய ஜெகநாதன் திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், ஊத்துக்குளி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கலாவதி, ஊத்துக்குளி தாசில்தாராகவும், விடுப்பில் இருந்த உடுமலை தனி தாசில்தார் கணேசன், மடத்துக்குளம் தனி தாசில்தாராகவும், உடுமலையில் இருந்த தயானந்தன், உடுமலை குடிமைப்பொருள் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.அங்கு பணியாற்றிய விவேகானந்தன், உடுமலை ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு, தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE