அனுப்பர்பாளையம்:ஊராட்சி பகுதிகளில் தார் ரோடு பணிக்கு, 1.19 கோடி ரூபாயில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், பூமி பூஜையுடன் துவங்கியது.திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சிக்கு 36 லட்சம் ரூபாய், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு 19.50 லட்சம் ரூபாய், வள்ளிபுரம் ஊராட்சிக்கு 6.50 லட்சம் ரூபாய், பட்டம்பாளையம் ஊராட்சிக்கு 34.60 லட்சம் ரூபாய், காளி பாளையம் ஊராட்சிக்கு 32 லட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் நிதி தார் ரோடு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இப்பணிக்கான பூமி பூஜையில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார் தலைமை வகித்து, தார் ரோடு பணியை துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சொர்ணாம்பாள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE