திருப்பூர்:நீண்ட இடைவெளிக்கு பிறகு உழவர் சந்தையில் நேற்று வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்திருந்தது. ஒரே நாளில், 21 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையானது.கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததால், மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், விசேஷங்களில் கலந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால், விருந்து சமைக்க, காய்கறி வாங்க சந்தையில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று முகூர்த்த தினம் என்பதால், நேற்று காலை உழவர் சந்தையில் காய்கறி, உணவு பதார்த்தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.வழக்கமாக திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு, 4,500 பேர் வருவர். ஊரடங்கின் போது, 500 முதல், ஆயிரம் வாடிக்கையாளர் வருவதே அரிதாக இருந்தது. நேற்று காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க, 6,000 பேர் வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் சந்தைக்கு வாடிக்கையாளர் வரத்து அதிகரித்தால் விவசாயிகள், உழவர் சந்தை அலுவலர் நிம்மதி அடைந்தனர். நேற்று ஒரே நாளில், 21 லட்சம் ரூபாய்க்கு, 98 டன் காய்கறி விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE