திருப்பூர்:'வளர்ச்சிக்கான பட்ஜெட்' என, தமிழக பட்ஜெட் குறித்து, திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல்:மாநில அரசு, கடினமான சூழலிலும் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளித்தும், உட்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையிலும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு விருதுநகரில் ஜவுளி தொழில் குழுமம், திறன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு, நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள், தொழில் துறைக்கான பாதைகள் அமைத்தல் ஆகியன தொழில் மேம்பாட்டுக்கு வழி வகுக்கும். வேளாண் துறைக்கான புதிய திட்டங்கள் ஆகியனவும் இந்த பட்ஜெட்டில் வரவேற்கும் வகையில் உள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம்:உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நெடுஞ்சாலை துறை ரோடுகள் மற்றும் ஊரக பகுதி சாலைகள் மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும் வகையில் உள்ளன. நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் வகையில் தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறையினரின் கருத்துகள் பெற்று செயல்படுத்தும் திட்டம் தொழில் துறை வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தும்.அத்திக்கடவு - அவிநாசி திட்டம், டிச., மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு பல தரப்புக்கும் பயனளிக்கும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம், 6,683 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும் என்பதும் அதை திருப்பூர் வரை விரிவுபடுத்துவது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு, திருப்பூர் தொழில் துறையினருக்கு பேருதவியாக அமையும்.'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன்:மாநில அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ெஜட்டில், தொழில் துறையின் மேம்பாட்டுக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜவுளி தொழில் பூங்கா அமைத்தல், தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்டித் தரும் திட்டம்; தொழிலாளர் திறன் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அரசின் அக்கறையையும், தொழில் வளர்ச்சியில் அரசு காட்டும் ஆர்வமும் வெளிப்படுகிறது. அரசின் இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE