சிக்கபல்லாபூர்:கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டம், ஹிரேநாகவல்லி கிராமத்தில், பாறைகளை வெடிக்க பயன்படுத்தும், 'ஜெலட்டின்' குச்சிகளை இடம் மாற்றும் போது, திடீரென வெடித்தில், ஆறு பேர் உடல் சிதறி இறந்தனர்.
க்ஷகர்நாடகாவின்ஷிவமொகாவின் ஹுனசோடு பகுதியில், முறைகேடாக பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள், கடந்த மாதம் வெடித்து, ஆறு பேர்இறந்தனர்.இதனால், மாநிலம் முழுவதும், அனுமதியின்றி முறைகேடாக இயங்கும் கிரஷர்கள், குவாரிகளில், சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், சிக்கபல்லாபூர் மாவட்டம், ஹிரேநாகவல்லி கிராமத்தில், நாகராஜரெட்டி என்பவருக்கு சொந்தமான, கல் குவாரியில்,நள்ளிரவு, சுரங்க துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.அப்போது, அனுமதி பெறாமல் பதுக்கி வைத்திருந்த, ஜெலட்டின் குச்சிகளை, அதிகாரிகளின் கண்களில் படாமல், அவசர, அவசரமாக, 'டாடா ஏஸ்' வாகனத்தில், வேறு இடத்துக்கு, குவாரி நிர்வாகத்தினர் இடம் மாற்றினர்.
அப்போது, திடீரென, பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில், பொறியாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் உட்பட, ஆறு பேர் சம்பவ இடத்திலேயே, உடல் சிதறி பலியாயினர். அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டுனர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து, மாநில போலீசின், சி.ஐ.டி., பிரிவு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது; இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE