பல்லடம்:குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணியில், பல்லடம் நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், தினசரி, 15 டன் குப்பை சேகரமாகிறது. இவை மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு, நகராட்சி கிடங்குகளுக்கு அனுப்பப்படும். அங்கு மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இது குறித்து, நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவத: மக்கும் குப்பைகள் அனைத்தும் நவீன இயந்திரங்கள் மூலம் துண்டாக்கப்பட்டு, அவை கிடங்குகளில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்படும். ஏழு தொட்டிகளில் மாற்றி, 55 நாட்களில் முழுமையாக மக்கச்செய்து உரமாக மாற்றப்படும். தினசரி சேகரமாகும் குப்பைகள் சுற்று அடிப்படையில் இந்த செயல்முறையில் ஈடுபடுத்தப்படும்.தாராபுரம் ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள இரு உரக் கிடங்குகளிலும் இப்பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஒரு சுற்றுக்கு, 5 டன் உரங்கள் சேகரமாகின்றன. இவற்றை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE