திருப்பூர்:அ.தி.மு.க., நிர்வாகி கொலை சம்பவத்தை கண்டித்து, திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை, கோவிலுாரை சேர்ந்தவர் ராஜேஷ், 38; ஆலங்காடு பகுதி ஒன்றிய கவுன்சிலர். இவர் தற்போது, அ.தி.மு.க., வில் உள்ளார். இவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்தது.இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம், திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில், மாநகராட்சி அலுவலகம் அருகில், இணை அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE