தமிழ்நாடு

நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் தூக்கம் கலையுமா? நெரிசலில் சிக்கிய தீயணைப்பு வாகனம்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 23, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடத்தில், தீயை அணைக்க சென்ற வாகனம், தீயணைப்பு வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.பல்லடம் என்.எச்., ரோட்டில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் என்பது வாகன ஓட்டிகளுக்கு தீராத தலைவலியாக மாறி வருகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை. இச்சூழலில், நேற்று வாகன நெரிசலில் சிக்கிய பல்லடம்
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் தூக்கம் கலையுமா? நெரிசலில் சிக்கிய தீயணைப்பு வாகனம்

பல்லடம்:பல்லடத்தில், தீயை அணைக்க சென்ற வாகனம், தீயணைப்பு வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.பல்லடம் என்.எச்., ரோட்டில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் என்பது வாகன ஓட்டிகளுக்கு தீராத தலைவலியாக மாறி வருகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை.
இச்சூழலில், நேற்று வாகன நெரிசலில் சிக்கிய பல்லடம் தீயணைப்பு வாகனம், தீ விபத்தை தடுக்க முடியாத நிலைக்கு ஆளானது.நேற்று மாலை, 6.00 மணிக்கு, பனப்பாளையம் காரணப்பெருமாள் கோவில் பின்புறம் இருந்த பந்தலில் தீப்பிடித்தது. இதில், பந்தல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த மரம் தீ பற்றி எரிந்தது.
அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் கழித்து தீயணைப்பு வாகனம் வர, அதற்குள் பந்தலில் இருந்த, ஒரு லட்சம் மதிப்பிலான பந்தல் பொருட்கள் எரிந்து சாம்பலாயின.பொதுமக்களின் முயற்சியால், தீ பரவாமல் அணைக்கப்பட்டது.
பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.சுட்டிக்காட்டிய'தினமலர்'தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் உள்ளது தீயணைப்பு நிலையம். இருப்பினும், வாகன நெரிசலால் உரிய நேரத்துக்கு வர முடியாமல் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. பொதுமக்கள் முயற்சியால் மட்டுமே பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. நேற்று முன்தினம் கூட, இது பற்றி விரிவான செய்தி வெளியானது.ஆனால், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இனியாவது விழித்து, ரோட்டை அகலமாக்கவும், சீரமைக்கவும் முன்வர வேண்டும்.சுட்டிக்காட்டிய 'தினமலர்'தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் உள்ளது தீயணைப்பு நிலையம்.
இருப்பினும், வாகன நெரிசலால் உரிய நேரத்துக்கு வர முடியாமல் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. பொதுமக்கள் முயற்சியால் மட்டுமே பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. ஆனால், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இனியாவது விழித்து, ரோட்டை அகலமாக்கவும், சீரமைக்கவும் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X