கோவை:அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றால், டேப்லெட், ஸ்மார்ட் போன் போன்ற, அசத்தலான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இருபிரிவுகளாக, வினாடி-வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தை தாண்டி பொது அறிவை வளர்த்து கொள்வதோடு, மாணவர்களின் சிந்தித்தல், பகுப்பாய்தல் திறனை மேம்படுத்துவதே, இப்போட்டியின் நோக்கம்.அறிவியல் தொழில்நுட்பம், கலை, பண்பாடு, கலாசாரம், விளையாட்டு உள்ளிட்ட தலைப்புகளில், 150 கேள்விகள் கேட்கப்படும். பள்ளி அளவிலான போட்டியில், முதலிடம் பெற்றவர்களின் பெயர்களை, 'எமிஸ்' இணையதளத்தில், இன்று (பிப்.,24ம் தேதி) பதிவேற்ற வேண்டும். இவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டிகள், Exams.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக, ஆன்லைன் மூலம் வரும், 27ல் நடக்கிறது.இதில் முதலிடம் பெறுவோருக்கு, 'டேப்லெட்', இரண்டாம் பரிசுக்கு 'ஸ்மார்ட்போன்', மூன்றாமிடம் பெறுவோருக்கு, 'சயின்டிபிக் கால்குலேட்டர்' பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்றால், 'பென்டிரைவ்' பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முறையில் மாணவர்கள் கற்க வசதியாக, இந்த பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்காக மாணவர்களை தயார்ப்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE